செவ்வாய், ஜனவரி 10, 2012

24 மணி நேரமும் இயங்கும் தனியான முஸ்லிம் சேவை


 தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகி வரும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் தனியான முஸ்லிம் சேவையாக ஒலிபரப்பவுள்ளதாக கூட்டுத்தாபனத் தலைவரான ஹட்ஷன் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கென தனியான ஒரு வானொலிச் சேவை இல்லை எனவே தனியான முஸ்லிம் சேவை ஒன்றை தான் பெற்றுத்தர தான் தயாராக இருபதாகவும் இதற்கு முஸ்லிம் புத்திஜீவிகள் , அமைச்சர்கள், தனவந்தார்கள் முன்வர வேண்டும் 
என்று இலங்கை ஒலி பரப்பு கூட்டு தாபனத்தின் தலைவரான ஹட்ஷன் சமரசிங்க கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோரிக்கை ஒன்றை முஸ்லிம் சமூகத்திடம் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
.

இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற முஸ்லிம் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்தத அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாத் தினத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை ஒலிபரப்பை 24 மணிநேர ஒலிபரப்பாகச் செயற்படுத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னைப் பலரும் ஒரு முஸ்லிமா எனக் கேட்பதாகவும் ஹட்சன் சமரசிங்க இங்கு தெரிவித்துள்ளார் .
Thanks To Lankamuslim.org

கருத்துகள் இல்லை: