ஞாயிறு, ஜூன் 24, 2012

இராணுவம் மக்களின் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்


இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினையடுத்து பொதுமக்களின் காணிகளினை பயன்படுத்தும் பாதுகாப்பு தரப்பினர்,அவற்றை அம்மக்களின் பாவனைக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இணையப் போகிறதா ?


யாழ்பாண உதயன் பத்திரிகையின் 23.06.2012.இன்றைய செய்தி :’நில மீட்புப் போரில் மு.காவும் கூட்டமைப்புடன் குதிக்கிறது; கட்சித் தலைமை அதிரடி முடிவு:’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி : வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் சாத்வீக வழியிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு

இலங்கையின் சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69 ஆயிரம்: பெண்களின் எண்ணிக்கை அதிகம்



அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. 

வெள்ளி, மே 11, 2012

அல் மதீனாப் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும்


சம்மாந்துறை அல் மதீனாப் பாடசாலையில் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(டி.ஏ) அவர்களின் தலைமையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்இ தடம் புத்தக வெளியீடும் இடம் பெற்றதோடு ஓய்வு பெற்ற அதிபருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதிகள் வரிசையில் சம்மாந்துறை வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர்களான திரு.அஸீஸ் முகைதீன் அவர்களும் எச்.எம்.பாறூக் அவர்களும் ஜானாதிபதி ஒருங்கிணைப்புச் செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
"Thanks To www.sammanthuraitk.com"

சம்மாந்துறை முஸ்லிம் டாக்டர்களின் சாதனை ~ Jaffna Muslim

சம்மாந்துறை முஸ்லிம் டாக்டர்களின் சாதனை ~ Jaffna Muslim:

'via Blog this'

சனி, பிப்ரவரி 18, 2012

வட்டி தடுக்கப்பட்ட வரலாறு


(முன் குறிப்பு: 'வட்டி' என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் மற்றும் வங்கித்  தொடர்புடைய நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான தொகைதான். இஸ்லாம் தடுத்திருக்கும் ‘ரிபா’ இந்த வட்டியையும் உள்ளடக்கியது மட்டுமல்லாமல் மேலும் விரிவான பொருள்களைக் கொண்டது. குர்ஆன் குறிப்பிடும் ‘ரிபா’வைப் பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் அதை, நாம் விளங்கியிருக்கும் ‘வட்டி’ என்ற குறுகிய பொருளில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இறைமறையில் இடம்பெறும் 'ரிபா' எனும் அரபுச் சொல்லுக்கு 'வட்டி' என்றே தமிழாக்கப்பட்டுள்ளது. அதற்கு வேறொரு தமிழ்ச் சொல்லைத் தேடுவதைவிட குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆழமான பொருளுடைய ‘ரிபா’ என்ற சொல்லையே பயன்படுத்திக் கொள்ளலாம்).

செவ்வாய், ஜனவரி 10, 2012

24 மணி நேரமும் இயங்கும் தனியான முஸ்லிம் சேவை


 தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகி வரும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் தனியான முஸ்லிம் சேவையாக ஒலிபரப்பவுள்ளதாக கூட்டுத்தாபனத் தலைவரான ஹட்ஷன் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வெள்ளி, ஜனவரி 06, 2012

எதிர்கால நவீன உலகு இஸ்லாத்திற்கே - கலாநிதி சபீனா இம்தியாஸ்

கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா இம்தியாஸ்
(பீடாதிபதிபிரயோக விஞ்ஞான பீடம் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா அவர்கள் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். ஆசிரியர் ஏ.ஆர்.எம். இஸ்மாயில், எஸ்.எம். சல்ஹா உம்மா தம்பதிகளின் புதல்வியான இவரது கணவர் எஸ். இம்தியாஸ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்



Dec 29, 2011
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது